திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:54 IST)

மலையாளத்தில் இருந்து இந்திக்கு ரீமேக் ஆகும் சஸ்பென்ஸ் திரில்லர்!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அஞ்சாம் பத்திரா திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

மலையாள படங்களுக்கு தென்னிந்தியா மட்டுமில்லாமது இப்போது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வருடத்துக்கு குறைந்தது 10 மலையாளப் படங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் இப்போது அஞ்சாம் பத்திரா என்ற த்ரில்லர் திரைப்படம் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அஞ்சாம் பத்திரா திரைப்பட தயாரிப்பாளர் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று சொல்வதில் தான் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.