செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:14 IST)

பிடித்த சரக்கு என்ன என்று கேட்ட ரசிகர்… போட்டோவுடன் விளக்கம் அளித்த நடிகை!

முன்னாள் நடிகை மாளவிகா தனக்கு பிடித்த மதுவகை எதுவென்று புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

நாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நடிகையாக இருந்த மாளவிகாவை பிரபலமாக்கியது இரண்டு படங்கள். முதல் படம் திருட்டு பயலே. அந்த படத்தில் கணவனுக்கு தெரியாமல் அவரின் நண்பருடன் கள்ள உறவில் இருப்பவராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் சித்திரம் பேசுதே படத்தில் வாழ மீனுக்கும் பாடலில் ஆடியதன் மூலம் ஒரே நாளில் உலகம பேமஸ் ஆனார்.

அதன் பின்னர் ஒரு பாடலுக்கு ஆடுவது மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது என பிஸியாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த மது என்ன என்று கேட்க அதற்கு ஸ்காபா விஸ்கி எனும் மதுவகைதான் உலகிலேயே மிகச்சிறந்தது எனக் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.