1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:09 IST)

அரசு வழங்கும் இலவச சைக்கிள்களில் சாதிவாரி டோக்கன்… கிளம்பிய சர்ச்சை!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சைக்கிள்களில் சாதிவாரியாக டோக்கன் வைக்கப்பட்டு இருந்தது கண்டனங்களை கிளப்பியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக் கூடத்தில் மாணவிகளுக்காக இலவச சைக்கிள்கள் வழ்ங்கும் விழா நடந்தது. அதில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

கொடுக்கப்பட்ட சைக்கிள்களில் மாணவிகளின் வரிசை எண்ணும் சாதியும் குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரி புகழேந்தி சம்மந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.