சின்னக்குழந்தை போல் துள்ளி குதிக்கின்றேன்: ‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து மாளவிகா மோகனன்!

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா மாளவிகா மோகனன்?
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா மாளவிகா மோகனன்?
siva| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (09:43 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்திய திரையுலகமே இந்த படத்தின் ரிலீசை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் நாயகி மாளவிகா மோகனனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியாகும் முன்னரே ஏற்கனவே மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும், மாளவிகா மோகனனுக்கு இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இன்னும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தவர்களில் ஒருவரான மாளவிகா மோகனன் சற்று முன் தனது டுவிட்டர் தளத்தில் ‘மாஸ்டர்’ பட ரிலீஸ் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தியேட்டரில் ‘மாஸ்டர்’ படத்தை கொண்டாட இன்னும் 19 மணி நேரம் மட்டுமே உள்ளது என்றும் நான் இதனை நினைத்து ஒரு சின்ன குழந்தை போல உற்சாகமாக குதித்து வருகின்றேன் என்றும் கூறியுள்ளார்

மேலும் என்னுடைய உற்சாகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் இன்று எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் கேள்விகளை கேட்டால் அதற்கு நான் மாலை 5 மணிக்கு பதிலளிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மாளவிகா மோகனனிடம் கேள்விகளை கேட்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :