வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூன் 2020 (19:48 IST)

மணிரத்னம் பட நடிகைக்கு கொரோனாவா? அபார்ட்மெண்ட் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு

மணிரத்னம் பட நடிகைக்கு கொரோனாவா?
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’உயிரே’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தக்க தய்ய தய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவுக்கு கொரோனா என்றும் இதனால் இவருடைய அப்பார்ட்மெண்ட் சீல் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன 
 
ஆனால் இதுகுறித்து மும்பை மும்பை மாநகராட்சி தெரிவித்தபோது மலைக்கா அரோராவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள நபருக்கு தான் கொரோனா என்றும் இதனை அடுத்து மலைக்காவும் அவரது மகன் மட்டுமின்றி அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ளவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது 
மேலும் அந்த அப்பார்ட்மெண்டில் சீல் வைக்கவில்லை என்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் மும்பை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. இதனை அடுத்து மலைக்கா அரோராவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது