வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:46 IST)

பைக்கில் கம்பீரமாக பிக்பாஸ் சுஜா வருணி; வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் உள்ளே வந்தவர் சுஜா வருணி. அவரும் ஆரம்பத்தில் நிதானமாக தான் இருந்தார். அவரை பிராங்க் என்ற பெயரில் பலரும் வம்பிழுத்து கலாய்த்ததால் கொஞ்சம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். 
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சுஜாவின் நடவடிக்கைகள் ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் அவரிடம் நேரடியாக வைக்கப்பட்டன. பின் நிகழ்ச்சியில் சினேகனுக்கும் சுஜாக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா மிகவும் கொஞ்சிக் குழைந்து பேசுவதும், பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தார். பல நேரங்களில் கலங்கி  அழுதிருக்கிறார். பிறகு நிகழ்ச்சி முடிவடைவதற்கு சிலநாட்கள் முன்னதாக எலிமினேட் ஆனார்.
 
தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் பைக்கில் கம்பீரமாக  உட்கார்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிக்பாஸில் இருந்த சுஜாவா இது என ஆச்சரியமாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.