வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (17:52 IST)

கடைசி நேரத்தில் பைக்கில் பிரசாரம் செய்த தினகரன்

ஆர்.கே.நகரில் பிரசாரத்துக்கு கடைசி நாளான இன்று டிடிவி தினகரன் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. பிராசரம் இன்றுடன் முடிவடைந்தது. பிராசரம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக, திமுக, டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடைசி நாளில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
 
டிடிவி தினகரன் சற்றும் சளைக்காமல் ஆக்டிவாக பிரசாரம் செய்தார். குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் வேகமாக கொண்டு சென்றார். இன்று கடைசி கட்ட பிரசாரத்தின்போது தினரன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். வெற்றிவேல் பைக் ஓட்டினார், தினகரன் அவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டு கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
ஆர்.கே.நகரில் மற்றவர்களை விட டிடிவி தினகரன் சுறுசுறுப்படன் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் நீங்காதவாறு செய்துள்ளார். நாளை மறுநாள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.