திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:21 IST)

அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை திமுக அரசு நிராகரிக்கிறது…. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து தலைவர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தலும் நடந்தது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல் முடிந்து இப்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ‘உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தெம்பில்லாத திராணியில்லாத திமுக அரசு அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கிறது. அதிமுக எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாது’ எனப் பேசியுள்ளார்.