மீண்டும் உயிர்த்தெழும் 'பொன்னியின் செல்வன்;: மணிரத்னம் போட்ட மெகா திட்டம்

Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (22:18 IST)
கல்கியின் காலத்தால் அழியாத காவியமான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் இறங்கினர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த முயற்சியை எடுத்த போதிலும் இன்று வரை இந்த கதை படமாக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. குறிப்பாக முதல் பிரச்சனை பட்ஜெட். இதனால்தான் இந்த படம் பலமுறை கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் மல்டிஸ்டார் படம் எடுத்து வெற்றி பெற்ற மணிரத்னம், தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவதில் முயற்சித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய், விக்ரம், சிம்பு ஆகிய முவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றுவிட்டாராம். மேலும் விஜய்யை வைத்து போட்டோஷெஷனும் அவர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.


வந்தியத்தேவன் கேரக்டரில் விஜய்யும், ராஜராஜ சோழன் கேரக்டரில் விக்ரமும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதை படமானால் 'பாகுபலியை விட பத்து மடங்கு வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :