வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (11:50 IST)

யாஷிகாவுடன் காதல் ; மஹத்தை விட்டு பிரிகிறேன் : முன்னாள் காதலி உருக்கம்

பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் மஹத் காதல் கொண்டுள்ளதால் அவரை விட்டு பிரிவதாக அவரின் முன்னாள் காதலி பிராச்சி தெரிவித்துள்ளார்.

 
நேற்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா மீது தனக்கு காதல் இருப்பதாக ஐஸ்வர்யாவிடம்  மகத் பேசும் உரையாடல் வெளியானது. வெளியில் எனக்காக ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான். இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிக்க போகின்றேன் என்று தெரியவில்லை. கடவுள்தான் இதை தீர்த்து வைக்க வேண்டும் என்று மகத் கூறினார்.
 
அதேபோல், மஹத்துக்கு வெளியே ஒரு காதலி இருக்கின்றார் என்பது எனக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தெரியும். அப்படி இருந்தும் அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதன்பின்னர் அது காதலாக மாறியது என்று யாஷிகா கூறுகிறார்.

 
ஏற்கனவே மஹத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நெட்டின்கள் தற்போது அவரும், யாஷிகாவும் காதலில் விழுந்து விட்டது உறுதியாகி விட்டது என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில்,ம ஹத்தின் முன்னாள் காதலி பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் காதலியை பிரிவது குறித்து மஹத் பேசிய வீடியோவை இணைத்து,  ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “ இப்படித்தான் மஹத் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். நான் விரும்பிய ஒருவரை அனுப்பி வைத்தேன். நிகழ்ச்சி முடிந்த பின் எங்கள் வாழ்க்கையை தொடங்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். சமூகவலைத்தளங்களில் வெளியான விமர்சனம் காரணமாகவே என் சொந்த வாழ்க்கை குறித்து பேசுகிறேன். 

 
மஹத் என் மீது காதலில் இருந்தார். நானும் அவரை இப்போதும் காதலிக்கிறேன். மஹத்துடன் நான் தற்போது இல்லை. எனவே மற்றவர்கள் கருத்துகளுக்கு நான் பதில் கூற முடியாது. ஆனால், மஹத்தை நேரில் சந்தித்து இதுபற்றி விவாதிப்பேன். அவர் யாஷிகாவை காதலிக்கிறார் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. எனக்கு இது காயத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இதனால் என் வாழ்க்கை பாதிக்காது.  இது என் சொந்த பிரச்சனை என்பதால் என்னிடம் யாரும் எதுவும் கேட்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன்.  என்னை விட்டு விடுங்கள்” என உருக்கமாக கூறியுள்ளார்.