1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (22:14 IST)

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல: இது பிக்பாஸ் காதல்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் மகத் மற்றும் ஐஸ்வர்யா பேசி வருகின்றனர்.
 
வெளியில் எனக்காக ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான். இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிக்க போகின்றேன் என்று தெரியவில்லை. கடவுள்தான் இதை தீர்த்து வைக்க வேண்டும் என்று மகத் கூறுகின்றார்.
 
மகத்துக்கு வெளியே ஒரு காதலி இருக்கின்றார் என்பது எனக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தெரியும். அப்படி இருந்தும் அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதன்பின்னர் அது காதலாக மாறியது என்று யாஷிகா கூறுகிறார்
 
உண்மையில் இருவருக்கும் வந்தது காதலே அல்ல என்பதும், அதற்குரிய பெயரை நாகரீகம் கருதி சொல்ல விரும்பவில்லை என்று பல டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதலே இல்லை என்றும் அதையும் தாண்டி புனிதமானது என்றும் பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.