1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (17:08 IST)

ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கான புராண கதை

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது ரக்‌ஷா பந்தன்
சொந்தத் தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்று மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக்  கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்‌ஷா பந்தன்.
 
எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறுபாடுமின்றி சொந்தங்களாக என்னைக் கொண்டாடும் இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை  எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும்  கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு.
 
புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான  வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார்.  பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர்  வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும்  புனிதக்கயிறைக் கட்டினார். 
 
அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை  வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள்  லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக,  இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’  கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.