திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (11:47 IST)

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கழற்றிவிட்ட காதலன் - குழந்தையை பார்த்ததும் மனம் இளகி செய்த காரியம்

வேலூரில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமனம் செய்ய மறுத்த காதலன் தனது குழந்தையை பார்த்ததும் மனம் மாறி தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த ஹரி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். ஹரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அத்துமீறியதால் ராஜலட்சுமி கர்ப்பமுற்றார்.
 
இதனையடுத்து ராஜலட்சுமி, ஹரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரி தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மறுத்துள்ளார்.
 
இதனிடையே நேற்று ராஜலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இதனையறிந்த ஹரி, தன் குழந்தையைக் காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தையை பார்த்ததும், மனம் மாறிய ஹரி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து ராஜலட்மிக்கு தாளி கட்டி திருமணம் செய்து கொண்டார்.