1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (12:31 IST)

சிம்பு-சுந்தர் சி கூட்டணியில் இணையும் மஹத்

டோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'அட்டாரினிட்டிக்கி தாரேதி' சூப்பர்  ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக  நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து  வருகிறது,  இந்நிலையில் சுந்தர் சி, சிம்பு கூட்டணியில் மஹத் இணைத்து இருக்கிறார். மஹத் முக்கிய  வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,
 
பெயரிடப்படாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் ஆகாஷ் மேகா, கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.