புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (19:51 IST)

சிம்புவுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை: தனுஷ்

கோலிவுட் திரையுலகில் இரண்டு பிரபல நடிகர்கள் அதிலும் போட்டியாளர்கள் இணைந்து நடிப்பதில் பல சிக்கல்கள் இருந்ததுண்டு. எம்.ஜி.ஆர்-சிவாஜி ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தனர். கமல்-ரஜினி இருவரும் பிரபலம் ஆன பின்னர் இணைந்து நடிக்கவில்லை. அதேபோல் அஜித்-விஜய் இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தனர். இந்த நிலையில் சிம்புவுடன் இணைந்து நடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என தனுஷ் கூறியுள்ளார்.

இன்று நடந்த 'வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், 'முதலில் இந்த படத்தில் அன்பு கேரக்டருக்கு சிம்புவை கமிட் செய்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பின்னர் 'வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அந்த அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை என கூறி இந்த கேரக்டரில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்று கூறினார்.

தற்போது சிம்பு நடிப்பதாக இருந்த அன்பு கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார் என்பதும், தனுஷூகாக இயக்குனர் சொன்ன அந்த முக்கியமான கேரக்டரில் இயக்குனர் அமீர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.