திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (21:19 IST)

சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய ஹைகோர்ட் உத்தரவு

கடந்த 2013 ஆம் ஆண்டும் சிம்புவை வைத்து பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் அரசன் என்ற படத்தை தயாரிக்க இருந்தது. இதற்காக சிம்புவிற்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. 
 
இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ரூ.50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிக்காத காரணத்தால் படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்க பட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்க்கின் தீர்ப்பாக வாங்கிய முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்தை செலுத்த உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பணத்தை செலுத்த வேண்டும். 
 
அப்படி அதை செய்ய தவறும் பட்சத்தில், சிம்புவுக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் ஜப்தி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.