1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (16:32 IST)

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழையப் போகும் பிரபலம் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில்  மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது. 

 
இந்த நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்த இந்த நிகழ்ச்சி இப்போது பனிரெண்டாவது சீசனை எட்டியுள்ளது. இந்த 12வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார். 
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பொது போட்டியாளராக உதித் கபூர் என்பவர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது . பொறியியல் பட்டதாரியான இவர் ஒரு மாடல் ஆவார்.