வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (07:10 IST)

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

முதல் பாகத்தில் இல்லாத மஞ்சு வாரியர், கென் கருணாஸ் எல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். மஞ்சு வாரியர் பிளாஷ் பேக்கில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி “எனக்கும் மஞ்சுவாரியருக்குமான ரொமான்ஸ் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. எங்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சியை வெற்றிமாறன் மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.