ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:16 IST)

வெளிநாட்டு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் மகாராஜா…. நெட்பிளிக்ஸ் ரிலீஸ் எதிரொலி!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான போதே இந்தியா தவிர்த்த பல நாடுகளில் டிரண்ட்டிங்கில் வந்தது மகாராஜா. இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் முகநூல் பக்கத்தில் மகாராஜா படத்தின் கதையை சொல்லாமல் அதைப் பற்றி உங்கள் கருத்துகளை சொல்லவும் எனக் கேட்டிருந்தது. அதற்கு இந்திய ரசிகர்களை விட அதிகளவில் வெளிநாட்டு ரசிகர்கள்தான் பதிலளித்து வருகின்றனர். பலரும் படத்தைப் பாராட்டி தள்ளிவருகின்றனர். இதன் மூலம் மகாராஜா திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.