திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (07:50 IST)

ஓடிடியில் சாதனைப் படைத்து வரும் விஜய் சேதுபதியின் மகாராஜா!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

திரையரங்கில் சாதனை படைத்த இந்த படம் இப்போது ஓடிடியிலும் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளது. வெளியான 2 நாட்களில் மட்டும் இந்த படம் 3.2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.  நெட்பிளிக்ஸ் தளத்தில் 14 நாடுகளில் டிரண்டிங்கில் உள்ளது. உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற சாதனையையும் மகாராஜா பெற்றுள்ளது.