ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (11:30 IST)

மகாராஜா படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர்கான்!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அதிலும் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்கில் சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இப்போது மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல நடிகர் அமீர்கான் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவரே நடிக்கப் போகிறாரா அல்லது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்காக வாங்கியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.