ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:35 IST)

ஒரு வழியாக முடிந்தது சிம்பு & ஹன்சிகாவின் மஹா – சம்மர் ரிலிஸுக்கு திட்டம்!

ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் மஹா படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது.

அதையடுத்து இப்போது முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.