1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (12:03 IST)

அஜித்தையும் என்னையும் படத்தில் இருந்து தூக்கிட்டாங்க: பிக்பாஸ் சுரேஷின் வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் மற்ற போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார் என்றும் அவரது தந்திரமான செயல்களை போட்டியாளர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிக்பாஸ் சுரேஷின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அஜித் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியை தான் இயக்கி இருப்பதாகவும், அப்போது அஜித்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்றும் சுரேஷ் அந்த பேட்டியில் தெரிவித்தார்
 
மேலும் நானும் அஜித்தும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தோம் என்றும், என்றும் ஆனால் திடீரென இருவருமே அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டோம் என்றும் அது ஏன் என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை என்றும் சுரேஷ் கூறினார் 
 
மேலும் அஜித் ஒரு மகாத்மா என்றும் அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது என்றும் அவரது முகத்தைப் பார்த்தாலே யாரும் அவர் நல்லவர் என்று சொல்லி விடுவார்கள் என்றும் சுரேஷ் கூறினார். சுரேஷின் இந்த பழைய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது