1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (06:35 IST)

தீபிகாவின் படத்திற்கு குவியும் ஆதரவு: 2 மாநிலங்களில் வரிவிலக்கு

தீபிகா படுகோன் நடிப்பில் இன்று வெளியாகும் ‘சப்பக்’ என்ற படத்திற்கு மத்தியப் பிரதேச அரசு ஏற்கனவே வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது புதுவை அரசும் வரிவிலக்கு அறிவித்துள்ளது. மேலும் ஒருசில மாநிலங்கள் வரிவிலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
ஆசிட் வீச்சால் பாதிப்பட்டு பின்பு அதற்கு எதிராக போராடும் பெண்ணாக மாறிய லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வாரலாறு திரைப்படம் தான் ‘சப்பக்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இந்த படத்தில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரும் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்ததால் ஒருசிலர் அவர் மீது விமர்சனங்களை முன் வைத்ததோடு சப்பக் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த படத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சப்பக் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமியும் வரிவிலக்கு அளித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது