1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (20:59 IST)

இதற்காகவே நாங்கள் ஹிந்தி திரைப்படங்களை பார்ப்போம்: கனிமொழி ஆவேசம்

இந்தி எதிர்ப்பு என்பதற்கு மறுபெயரே திமுக என்ற நிலையில் இந்தித் திரைப்படங்களை பார்ப்போம் என திமுக எம்பி கனிமொழி டெல்லியில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் கண்மூடித்தனமான தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு ஆறுதல் கூற டெல்லிக்கு சென்ற கனிமொழி அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’மாணவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்பதற்காக தீபிகா படுகோனேவின் படங்களை புறக்கணிக்கப் போவதாக ஒரு சிலர் கூறியிருக்கின்றனர். எங்களுக்கு இந்தி படங்கள் பார்க்கும் பழக்கம் கிடையாது. ஆனால் தீபிகா படுகோன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நாங்களும் இந்தி படம் பார்ப்போம்’ என்று கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது