கொரோனா தப்பான ஆளுடன் மோதிவிட்டது – மாதவன் டிவீட்டால் சர்ச்சை!

Last Updated: திங்கள், 13 ஜூலை 2020 (11:37 IST)

நடிகர் அமிதாப் பச்சனின் குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதுபற்றி மாதவன் பகிர்ந்த டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் குடும்பமான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராதனா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் சமூகவலைதளங்களில் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவர்கள் விரைவில் மீண்டுவரவேண்டும் என தங்கள் பிராத்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மாதவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘கொரோனா தவறான ஆளோடு மோதிவிட்டது. அதன் நாட்கள் இன்னும் கொஞ்சம் காலம்தான். நீங்கள் மட்டும்தான் யார் பாஸ் என்பதைக் காட்ட முடியும் அமித்ஜி (அமிதாப் பச்சன்). சீக்கிரம் மீண்டு வாருங்கள். உங்களுக்காக என் பிராத்தனைகள்’ எனக் கூறியுள்ளார்.

இந்த டிவீட்டில் மாதவன் அமிதாப் பச்சனை கேலி செய்வது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :