அமிதாப் பச்சன் குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்த ஜான் சீனா !

Last Modified திங்கள், 13 ஜூலை 2020 (11:00 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஜான் சீனா பகிர்ந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று முன் தினம் பார்த்தோம். இதனை அடுத்து நேற்று வெளியான தகவலின்படி அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சன் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராதனா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த தகவலை அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
.


தனக்கும் தனது தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இருவருக்குமே மிகக் குறைந்த அளவில்தான் அறிகுறிகள் இருப்பதாகவும் எனவே இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் விரைவில் குணமடைய இந்திய ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பிரார்தித்து வருகின்றனர். இதையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் சினிமா நடிகருமான ஜான் சீனா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :