புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:00 IST)

மத துவேஷத்துடன் கேள்வி எழுப்பிய பெண் – மாதவன் அளித்த பொறுப்பான விளக்கம் !

மாதவன் சமீபத்தில் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை ஒட்டி சர்ச்சையான விவாதம் ஒன்று நடந்து வருகிறது.

நடிகர் மாதவன் சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி ஆவிட்டம் ஆகியவற்றை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த் பூஜையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர், அவன் மகன் மற்றும் தந்தை ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள பூஜை அறையில் இந்து கடவுள்களோடு சிலுவை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

அதைப் பார்த்த பெண் ஒருவர் அதைக் குறிப்பிட்டு  ‘ஏன் இந்து கடவுள்களுடன் சிலுவை இருக்கிறது. அது என்ன கோயிலா? நான் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்வது எல்லாம் கபட நாடகம்’ எனப் பின்னூட்டமிட்டார்.

அவருக்குப் பதிலளித்த மாதவன் ‘நான் உங்களிடம் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்.  நான் தர்கா மற்றும் தேவாலயங்களுக்கும் சென்று ஆசிர்வாதம் பெற்று வருவேன். நான் சிறுவயதிலிருந்தே எனது அடையாளத்தை பெருமையாகவும் அதே நேரத்தில் மற்ற மதங்கள் மேல் மரியாதை செலுத்தும்விதமாகவும் வளர்க்கப்பட்டுள்ளேன். எனக்கு எம்மதமும் சம்மதம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மாதவனின் இந்த பொறுப்பான பதிலுக்காக அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.