புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:30 IST)

ராணுவத்தினருடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய ”தல”..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னலாக உள்ளார். காஷ்மீரில் தங்கி பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற்றுவரும் தோனி, இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

மேலும் லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறும் வீரர்களுடனும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.