ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:40 IST)

தேசிய விருதில் ஒரு சின்ன வருத்தம்: மதன் கார்க்கி

தேசிய விருது அறிவிப்பில் ஒரு சின்ன வருத்தம் என பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று 67வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பதும் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படம் என்ற மூன்று விருதுகள் கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
அதேபோல் சூப்பர் டீலக்ஸ் நடித்த விஜய் சேதுபதிக்கு, விசுவாசம் படத்தில் இசை அமைத்த டி இமானுக்கும், ஒத்த செருப்பு படத்திற்கும் என தமிழ் திரைப்படங்கள் நேற்றைய அறிவிப்பில் விருதுகளை அள்ளின என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பில் தனக்கு ஒரு சின்ன வருத்தம் என்று மதன் கார்க்கி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சின்ன வருத்தம் அசுரன் படத்தின்  பின்னணி இசைக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.
 
மதன் கார்க்கியின் இந்த கருத்துக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே அஜித் ரசிகர்கள் மதன் கார்க்கியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.