1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (10:59 IST)

மதன் கார்க்கி எழுதி எம்விஎஸ் இசையமைத்துப் பாடிய"முதல் வரி" பாடல் வெளியானது!

அன்பின் ஆழமானது அதிகம் சொல்லப்படாத நுண்ணுணர்வுகளையும் போற்றும். 
 
அப்படி விடுபட்ட சொற்களும் சொல்லாத மொழிகளும் கூட காதலில் என்றுமே அழகுதான் என்பதை முதல் வரி பாடல் சொல்கிறது. 
 
மதன் கார்க்கி எழுதிய வரிகளுடன் எம்விஎஸ் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடல், அன்புக்குரியவரின் ஒவ்வொரு அம்சத்தையும் போற்றுவதற்குக் காதல் அதற்குரிய வழியைக் கொண்டுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டும் விதத்தில் அமைந்துள்ளது "முதல் வரி" பாடல்.