சூர்யா 44 படத்தின் அந்தமான் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதா?
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷூட்டிங் இந்த மாத தொடக்கத்தில் அந்தமானில் தொடங்கியது. அங்கு இடைவேளையே இல்லாமல் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் செப்டம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்தமானில் நடந்து வந்த படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் ஊட்டியில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.