வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (11:52 IST)

அஜித்தை வெகுவாக பாராட்டி "தளபதி 63" அப்டேட் குறித்து பேசிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். மற்றும் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கிறார். 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளிவந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தமாதம் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில்   நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியாகியாகி அஜித் ரசிகர்களை இன்ப மழையில் குதூகலப்படுத்தியது. 
 

 
நேர்கொண்ட பார்வை ட்ரைலரை கொண்டாடிய அஜித் ரசிகர்களை போன்றே தாங்களுக்கும் கொண்டாட வேண்டும் என கருதி தளபதி 63 படம் குறித்த அப்டேட்டை  பாடலாசிரியர் விவேக்கிடம் விஜய் ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விவேக், “தலைவா.. என்னை நம்புங்க. படம் குறித்த அப்டேட் வரும் போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். இப்போது இதைமட்டும் தான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தார்.
 

 
முன்னதாக, நேர்கொண்ட பார்வை பட ட்ரெய்லரில் அஜித் பேசும் வசனத்தை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், அந்த வசனத்துக்கு அஜித் சார்தான் சரியான உதாரணம் என்று கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார். விவேக்கின் இந்த பதில் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அஜித் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.