விஷால் அணிக்கு விஜய்சேதுபதி ஆதரவா? அவரே அளித்த பதில்!

vijaysethupathi
Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (19:45 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இரு அணியும் நாடக நடிகர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சிந்துபாத் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதியிடம் 'உங்கள் ஆதரவு யாருக்கு' என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு ஆதரவு. அது எந்த அணி என்பதை சொல்ல முடியாது' என்று கூறினார். மேலும்
'காலங்காலமாக உள்ள நடிகர் சங்க பிரச்சனை விரைவில் முடிவுக்கு வந்தால் நல்லது' என்று மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.


இந்த நிலையில் விஜய்சேதுபதி தயாரித்து நடித்த 'ஜூங்கா' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திரையுலகினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் விஜய்சேதுபதி தனது படத்தின் படப்பிடிப்பை வெளிநாட்டில் தொடர்ந்து நடத்தியதால் விஷாலுக்கும் விஜய்சேதுபதிக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே விஜய்சேதுபதியின் ஆதரவு பாக்யராஜ் அணிக்குத்தான் இருக்கும் என ஊகிக்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :