வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (16:11 IST)

ஷங்கரின் தெலுங்கு, இந்தி படங்களுக்கு செக் வைத்த லைகா!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி பட சேம்பர் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இதனால் ராம் சரண் தேஜாவின் தெலுங்கு படத்தையும் ரன்வீர்சிங் நடிக்கும் இந்திப் படத்தையும் இயக்குவதற்கு ஷங்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த சிக்கலை கடந்து ஷங்கர் எப்படி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.