1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (14:04 IST)

த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இன்று அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
த்ரிஷாவின் ஒரு சில திரைப்படங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் த்ரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட காலம் கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று ’ராங்கி’. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் கதையில் எம் சரவணன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு ராங்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று லைக்கா நிறுவனம் கூறியுள்ளது. அதேநேரம் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடியில் ரிலீஸாகுமா என்பது உறுதியாக தகவல் இன்று மாலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ராங்கி படம் த்ரிஷாவிற்கு மீண்டும் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்