ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:32 IST)

சந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’: செகண்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

காமெடி நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதும் சமீபத்தில் வெளியான ’பிஸ்கோத்’ திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பாரீஸ் ஜெயராஜ்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது
 
சந்தானத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ள இந்த கலர் கலரான வண்ணமயமான போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. சந்தானம் நடித்த ஏ1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் 
 
இந்த படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்