சிவாஜி பேரனை திருமணம் செய்யும் பிக்பாஸ் சுஜா வருணி

dev
Last Updated: திங்கள், 21 மே 2018 (19:20 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை பிக்பாஸ் சுஜா வருணிதிருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர் தான் சுஜா வருணி. இவரும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவும் காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை சுஜா வருணி மறுத்து வந்தார்
suja
இந்நிலையில் சிவாஜி தேவ், சுஜா வருணியுடணான காதலை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். அதில் என் அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் ஆசியுடன் என் பெயரை சிவாஜி தேவில் இருந்து சிவக்குமாராக மாற்றிக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
tw 1
மேலும் பிக்பாஸில் சுஜா வருணி அத்தான் எனக் கூறியது என்னை தான். தானும் சுஜாவருணியும் 11 வருடங்களாக காதலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
tw 2

ஆகவே இதுகுறித்து யாரும் வதந்தி பரப்பாமல் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என டிவீட் செய்துள்ளார். இதனை சுஜா வருணி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

tw3
tw4இதில் மேலும் படிக்கவும் :