வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:07 IST)

விஜய்யின் படத்தால் நஷ்டம்- விநியோகஸ்தர் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸான படம்  வாரிசு.

ஒரு தந்தை, மகன் பாசப்போராட்டத்தைப் பற்றிய குடும்பக்கதை என்பதால் ரசிகர்களிடையே   கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், விஜய்யின் வாரிசு படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக   கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர்  நடிகர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

அதில், ‘வாரிசு படம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையைத் திரும்ப தரும்படி’ அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் கொடுத்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
நடிகர் விஜய்க்கு தமிழகம் தவிர, கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.