வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (20:22 IST)

லூலூ மாலில் புர்கா அணிந்து பெண்கள் கழிவறைக்கு சென்ற நபர் கைது

கேரளம் மாநிலத்தில் புர்கா அணிந்துகொண்டு பெண்கள் கழிவறைக்கு சென்ற ஐடி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பிரபலமான மால்களில் ஒன்று லூலூ மால் ஆகும், இது மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வருகிறது.

இந்த பிரமாண்ட மால், தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலிக்குச் சொந்தமானது ஆகும். இந்த மாலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஷாபிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், லூலூ வணிக வளாகத்தில் புர்கா அணிந்து கொண்டு பெண்கள் கழிவறைக்குச் சென்று வீடியோ பதிவு செய்த ஐடி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸார்  அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.