கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் தேனியில் நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு
கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் தேனியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக வாகனங்கள் தேனி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு ஏற்றப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன முழு அடைப்பு காரணமாக தமிழக கேரள மாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெறும் அவதியில் உள்ளனர்.
Edited by Siva