1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (14:02 IST)

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 97 ஆண்டுகள் சிறைத் தண்டனை- நீதிமன்றம் அதிரடி

நமது அண்டை மாநிலம் கேரளம். அங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 

கேரளாவில்  தன் உறவுக்கார பள்ளி சிறுமி ஒருவரை 9 ஆண்டுகளாக( 6 வயது முதல் 13 வயது வரை) பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை( தாய்மாமன், 41 வயது)  போக்சோ வழக்கில் கைது செய்த  போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வழக்கு காசர்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த  வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபருக்கு 97 வருட சிறைத்தண்டனையுடன், ரூ.8 லட்சம் அபாரமும் விதித்து காசர்கோடு மாவட்ட நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும்,  இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.