கவினுக்கு செக் வைத்த லாஸ்லியா! பிக்பாஸ் இன்றைய முதல் புரமோ

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (09:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக 'மச்சான் மச்சான்' என்று பழகினாலும் சாக்சியை மட்டுமே அவர் லவ் செய்வதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் லாஸ்லியா மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் அவருடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுகிறது
கவின் ஒரு பிளேபாய் என்பதை விரைவில் புரிந்து கொண்ட லாஸ்லியா, கவினை 'அண்ணா' என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் நெருங்கி வருவதை தெரிந்து கொண்டு அவருக்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கின்றார் லாஸ்லியா. அதில் தன்னை இன்று முழுவதும் பார்க்கவே கூடாது. நானே பார்த்தாலும் நீ பார்க்ககூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.
இந்த கண்டிஷனை கண்டு அதிர்ச்சி அடைகிறார் கவின். என்னால் உன்னை நாள் முழுவதும் வச்சகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க கூட முடியும். ஆனால் பார்க்காமல் எப்படி இருப்பது? என்று கேள்வி எழுப்ப, அதற்கு உடன்படாமல் இன்று முழுவதும் பார்க்கவே கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறுகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் இதன் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :