வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (09:17 IST)

லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்: காரசார விவாதம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களமிறங்கிய மீராமிதுன், ஒருவர் பின் ஒருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுடைய இமேஜை உடைக்க வேண்டும் என்ற சதியுடன் வந்திருப்பதாக தெரிகிறது.
 
வனிதா, அபிராமி, சாக்சி, மதுமிதா, முகின், என ஒவ்வொருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட  மீரா, தற்போது எந்த வம்புதும்புக்கும் செல்லாமல் அமைதியாக தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும், அதே நேரத்தில் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணத்தை கொண்ட லாஸ்லியாவிடம் இன்று வம்பை இழுக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளது
 
ஆனால் மீராமிதுனின் வலையில் சிக்காத லாஸ்லியா சாமர்த்தியமாக பதிலளித்து ஒதுங்கி சென்றார். எனக்கு எதிராக நீ ஓட்டு போட்டது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரே எனக்கு எதிராக வேலை செய்தது போல் இருந்தது என்று மீரா கூற, அதற்கு லாஸ்லியா, 'எனக்கு இங்கு இருக்கும் எல்லோரும் நண்பர்கள் தான். நீங்கள் இப்படி நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மதுமிதா கூட இருந்தீர்கள், அப்போது நீங்கள் சொன்ன கருத்து எனக்கு தப்பாக தெரிந்தது' என்று கட் அண்ட் ரைட்டாக மீராவிடம் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.