மதுமிதாவிடம் சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

Last Modified திங்கள், 8 ஜூலை 2019 (15:42 IST)
பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில்  ஈடுபடுகின்றனர். 
அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான்  செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில்  பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே மதுமிதா படுக்கையறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார்.

அபிராமி எனக்கு உன்னிடம் பிரச்சனை இருக்கிறது மது, இல்லை என்று நினைத்து கொள்ளாதீர்கள் எனவும், என்னிடத்தில் நீ 5 நிமிடம் பேசவேண்டும் என்று சொல்லும் நீ உட்கார்ந்து பேசு. பேசும்போது எங்காவது ஒரு இடத்தில் மீண்டும் கலாச்சாரம், மூடி திறந்து என ஏதாவது பேச்சை எடுப்பாங்க அப்போ என்னோட வாயை திறப்பேன் மச்சான் என சாக்‌ஷியிடம் கூறுகிறார் அபிராமி.
 
இதை பார்க்கும்போது பிரச்சனை வந்துச்சா போச்சா என விடாமல், விடாப்பிடியாக வம்புக்கு போகும் அபிராமியை பார்த்தால் நமக்கே கடுப்பாக இருக்கிறது. மதுமிதாவை விடாமல் எப்படி எல்லாம் சண்டை போடலாம் என்று ஒத்திகை பார்த்து கொண்டதை போல தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :