வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (07:12 IST)

லோகேஷ் கனகராஜை அப்செட் செய்த வதந்தி…இதெல்லாம் யாருப்பா கெளப்பி விட்றது?

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ரசிகர்களை இருக்கையில் நெளிய வைத்தது. இதையடுத்து இப்போது லோகேஷ் ‘தலைவர் 171’ படத்துக்கான திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக லோகேஷ் பற்றி ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது. அதன்படி லியோ படத்தை இயக்கியதற்காக லோகேஷுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தில் தயாரிப்பாளர் பாக்கி வைத்துள்ளார் என்று தகவல் பரவியது. ஆனால் லோகேஷுக்கு முழு சம்பளமும் தரப்பட்டு விட்டதாம். தயாரிப்பாளரோடு நல்லுறவில் இருக்கும் லோகேஷ் இந்த வதந்திகளால் அப்செட் ஆகியுள்ளாரம். விரைவில் ப்ரஸ் மீட் ஒன்றை நடத்தி இது பற்றி பேச உள்ளதாக சொல்லப்படுகிறது.