புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:51 IST)

கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? அவரே கூறிய தகவல்!

தமிழ் சினிமாவில் தற்போதைய பிரபல இயக்குனராக நடிகர்களால் பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி படத்தை அடுத்து, கோலிவுட் வட்டாரத்தில் பிஷியாக அறியப்படும் இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் .

தற்போது நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் குறித்து அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் இறங்கியுள்ளார். அதவகையில் கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜகமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார் லோகேஷ்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய லோகேஷ், " இப்போதைக்கு இது பற்றி எதுவும் கூற முடியாது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. எனினும் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை நான் ஆரம்பித்துவிட்டேன். விரைவில் இது குறித்து தயாரிப்பு நிறுவனமே அறிவிக்கும் என தெரிவித்தார்.