"உயிர் முக்கியம் அப்புறம் தான் கொண்டாட்டம்" - வாத்தி சொல்லை தட்டாமல் கேட்கும் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. மேலும், நேற்று தான் இப்படம் வெளியாகவிருந்தது. இதனை எண்ணி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்துடன் ட்விட்டரில் படக்குழுவிற்கு தெரிவித்து கவலை பட்டதால் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தனர்.
அதில், "லாக் டவுன் மாஸ்டர் படத்திற்கு நாக் டவுன் இல்லை விரைவில் ரிலீஸ் ஆகும்" என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . "முதலில் உயிர் பிழைக்க வேண்டும். பின்பு கொண்டாடலாம்" என்று ரசிகர்களுக்கு செல்லமாக அட்வைஸ் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு செய்தார். இதனை கேட்டு தளபதி ரசிகர்கள் அனைவரும், சரி தலைவா... படம் எப்போ வேணாலும் வரட்டும் ஆனால், வரும்போது வேற லெவலில் மாஸ் பண்ணிடுவோம் என கூறி வருகின்றனர்.