டுவிட்டரில் ‘மாஸ்டர்’ FDFSஐ கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

டுவிட்டரில் ‘மாஸ்டர்’ FDFSஐ கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
டுவிட்டரில் ‘மாஸ்டர்’ FDFSஐ கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (11:51 IST)
ஒருவேளை கொரோனா பாதிப்பு இல்லாமல் நாடு இயல்பாக இருந்திருந்தால் இன்று தான் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய நாள். இன்று அதிகாலை 4 மணிக்கே முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடி இருப்பார்கள்
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக உலகிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் இன்று வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மாஸ்டர் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகின்றனர்

மாஸ்டர்FDFS ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை தேசிய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் எப்போது வெளிவந்தாலும் அந்த படத்தை வெற்றிப்படமாக ஆக வேண்டியது தங்களுடைய கடமை என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர்
தற்போதைய தகவலின்படி ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னரே திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பின்னரே விஜய் நடித்த ‘மாஸ்டர்’ உட்பட மற்ற அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :