வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (14:39 IST)

படம் தான் ரிலீஸ் ஆகல Trailer ஆச்சு விடுங்கடா... தெறிக்கும் ரெக்வெஸ்ட்!

விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Trailer என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
 
ஒருவேளை கொரோனா பாதிப்பு இல்லாமல் நாடு இயல்பாக இருந்திருந்தால் இன்று விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய நாள். இன்று அதிகாலை 4 மணிக்கே முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடி இருப்பார்கள்.
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக உலகிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் இன்று வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
தற்போதைய தகவலின்படி ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னரே திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பின்னரே விஜய் நடித்த மாஸ்டர் உட்பட மற்ற அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் படம் தான் ரிலீஸ் ஆகல அட்லிஸ்ட் டீசஸ் இல்ல டிரெய்லர் ஆச்சு வெளியிடுங்க என ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Trailer என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். எனவே, டீசஸ் இல்ல டிரெய்லர் அப்டேட் ஏதாவது வருமா என காத்திருந்து பார்ப்போம்...